இங்க நடந்தது வெறும் சம்பவமாக இருக்கக் கூடாது… அதிரடி ஆக்ஷனில் வெளியானது விஷாலின் லத்தி ட்ரெய்லர்.

இயக்குனர் ஏ வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ஒரு அதிரடித் திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தில் விஷாலுடன், சுனேனா, பிரபு , முனீஸ் காந்த், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போலீஸ்க்கு கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ள நடிகர் விஷாலின் கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படத்தின் ட்ரெய்லர் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனத்தை பெற்று வருகிறது. லத்தி படத்தின் டிரைலர் உடன் லத்தி படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நடிகர் சங்கத் தலைவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால்.

இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து இவர் நடிக்கும் சில படங்கள் சமீப காலங்களாக எந்த ஒரு வரவேற்பும் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது அதிரடியில் உருவாகியுள்ளார் லத்தி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

லத்தி பட பிடிப்பின் பல காயங்கள் ஏற்பட்ட நிலையில் தன்னுடைய முயற்ச்சியை கைவிடாமல் நடித்து உள்ளார் நடிகர் விஷால். இதனை தொடர்ந்து ஒரு படபிடிப்பு திளத்தில் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க விஷாலிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் விஷால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆனதால் கால்சீட் கொடுக்க முடியவில்லை, இதனால் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஷால் அவர்கள் நடிக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் தான் நடித்த படத்தில் கவனம் செலுத்தி வரும் விஷால் தற்போது லத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த நிலையில் இன்று டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் லத்தி படத்தின் ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டு உள்ளனர். அந்த வகையில்  லத்தி திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதியில் வெளியாக உள்ளதை ட்ரெய்லரில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் கடகுழு வெளியிட்டுள்ளனர்.

இதோ லத்தி படத்தின் டிரைலர்.

Leave a Comment