உதயநிதியை சுத்த விடும் விஷால்..! எல்லாம் இந்த ஒரே காரணத்திற்காக தான்..!

சமீபத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களும் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் வினோத்குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா அண்மையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிகள் பல்வேறு பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். பொதுவாக விஷால் மற்றும் உதயநிதி ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அப்பொழுது இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய கல்லூரி கால நிகழ்வுகளை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள்.

மேலும் இவர்கள் பொதுவெளியில் பேசிக்கொள்ளும் பொழுது போடா வாடா என உரிமையாக பேசிக் கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல் உதயநிதி பேசும்பொழுது சீக்கிரமாக நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடியுங்கள். இதை காரணமாக வைத்து தான் விஷால் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருகிறான் என்று கூறியுள்ளார்

அதேபோல பல நாட்களாக விஷாலிடம் நான் கால் சீட் கேட்டு வருகிறேன் ஆனால் எனக்கு விஷால் கால் சிட் தர மறுக்கிறார் என்று உதயநிதி கூறியது மட்டும் இல்லாமல் அதற்கு விஷால் உடனே நான் டேட் கொடுத்து விட்டால் நமது நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும் என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். பொதுவாக விஷால் மீது ஏகப்பட்ட  குற்றச்சாட்டுகள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தயாரிப்பாளர் இயக்குனர் என பலரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல விஷால் ஷூட்டிங்  பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வருவது கிடையாது அந்த வகையில் அடிக்கடி படப்பிடிப்பை தவிர்ப்பது வழக்கமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் சமீபத்தில் அவர் நடித்த லத்தி திரைப்படத்தைக் கூட அவருடைய நண்பர் ராணா மற்றும் நந்தா ஆகியோர்கள் தான் தயாரித்துள்ளார்.

இவர்களுக்கு விஷால் கால் சீட் விவகாரத்தில் பல்வேறு பிரச்சனை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட வழி வகுத்தது அதுமட்டுமில்லாமல் விஷாலிடம் அனுமதி கேட்காமலே பட குழுவினர்கள் ரிலீஸ் செய்தியை அறிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆகையால் உதயநிதிக்கு கால்ஷீட் கொடுத்து ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினால் தான் விஷால் உதயநிதிக்கு அல்வா கொடுத்து விட்டார்.

Leave a Comment