அடி மேல் அடி வாங்கிய விஷால் 23 கோடி செலவில் உருவான லத்தி இத்தனை கோடி நஷ்டமா.? அதிர்ச்சியில் கோலிவுட் சினிமா…

0
vishal-laththi
vishal-laththi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விஷால் இவர் நடிப்பில் வெளியாகிய   பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது நந்தா ராணா தயாரிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியாகிய திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தில் சுனைனா, பிரபு, தலைவாசல், விஜய், முனீஸ் காந்த், வினோத், சாகர் என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

விஷால் இந்த திரைப்படத்தில் கான்ஸ்டபிள் ஆக நடித்திருந்தார் அதாவது லத்தி ஸ்பெஷலிஸ்ட் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் பொழுது விஷாலுக்கு காயம் ஏற்பட்டதும் அதனால் விஷால் ட்ரீட்மென்ட் எடுத்ததும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

லத்தி திரைப்படத்தில் விஷால் கான்ஸ்டபிள் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கடமை தவறாத விஷால் பாலியல் குற்றவாளி என ஒரு இளைஞரை கடுமையாக லத்தியால் அடிக்கிறார் ஆனால் அவர் அந்த குற்றத்தை செய்யவில்லை என்பதால் உடனே விஷாலை சஸ்பெண்ட் செய்கிறார்கள் அதன் பிறகு தன்னுடைய உயர் அதிகாரி பிரபுவின் சிபாரிசால் மீண்டும் வேலைக்கு வருகிறார்.

மீண்டும் வேலைக்கு சேர்ந்த விஷால் லத்தியை இனி தொடவே மாட்டேன் என சபதம் எடுக்கிறார் பின்பு மீண்டும் லத்தியை எடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்த திரைப்படம் 23 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது ஆனால் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் 3.40 கோடி வசூல் மட்டுமே செய்துள்ளது. இதனால் இந்த திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இருந்தாலும் தியரட்டிக்கல் வசூல் நஷ்டம் அடைந்தாலும் ott ரிலீஸ் சாட்டிலைட் உரிமம் டப்பிங் என அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது ஓரளவு இந்த திரைப்படம் தேரிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.