தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் தற்போது இவர் துப்பரிவாளன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் முதல் பாகத்தை விஷால் பிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை மிஷ்கின் அவர்கள் இயக்கியிருந்தார் இப்படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர் அப்படக்குழுவினர்.
அதன்படி இப்படத்தில் ஹீரோவாக விஷாலும் மற்றும் அவருக்கு தோழனாக நடிகர் பிரசன்னாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் அவர்களே துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தையும் அவர் இயக்க முன்வந்தார். இப்படத்தில் நீரவ்ஷா ஒளிப்பதிவு மற்றும் இசை அமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் போட்டுள்ளனர். மற்றும் முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது, இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாத காலமாக செட் போடப்பட்டு ஷூட்டிங் எடுக்கப்பட்டு வந்த நிலையில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அது என்னவென்றால் போட்ட பட்ஜெட்டை தாண்டி அவர் அதிக அளவில் செலவுகளை செய்ததால் பைனான்ஸ் வாங்குவது கஷ்டம் என்றும் பிசினஸ் பண்ணுவது கடினம் என்றும் விஷால் சொன்னார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.எனவே விஷால் அவர்களே இப்படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.