விஷாலின் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் அஜித் பட கனெக்சன்.!

0

2017ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் துப்பறிவாளன் இந்த திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இதன் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் தயாராகிறது. துப்பறிவாளன் இரண்டு திரைப்படத்திற்கான pre-production வேலைகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த திரைப் படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா கமிட்டாகியுள்ளார், இவர் இதற்கு முன் ரஜினியின் 2.0, அஜித் நேர்கொண்ட பார்வை திரைப் படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.