புதிய கெட்டப்பில் மிரட்டும் விஷால், வெளியானது மார்க் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டர்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது விஷால் நடிக்கும் மார்க் ஆன்டணி படத்திற்காக மிகவும் மெனக்கட்டு வருவதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதாவது சண்டைக் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது நான்கு சக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சூட்டிங் நடக்கும் இடத்தில் மோதி விபத்து ஏற்பட்டு இருந்தது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஆகவில்லை ஆகையால் படபிடிப்பு ஓரிரு நாட்களிலேயே மீண்டும் தொடங்கியது. இந்த திரைப்படத்தை சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் ஒரு புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த போஸ்டரில் ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

அதாவது விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இதனால் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவும் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்ரே சொல்லலாம்.

இதோ மார்க் ஆண்டனி படத்தின் போஸ்டர்.

mark antony
mark antony
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment