தமிழக மருத்துவமனைக்கு விஷால் தங்கை செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்.!

vishal-tamil360newz
vishal-tamil360newz

திரை உலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால் ஆவார். இவர் நடிப்பதற்கு முன் நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி அவர்கள் விஷாலின் தந்தை ஆவார். இந்த நிலையில் 2004ஆம் ஆண்டில் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு  நடிகராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, வெடி, அவன் இவன் உட்பட இன்னும் பல படங்களை நடித்து சினிமா உலகில் கலக்கி வருகிறார். அவன் இவன் என்ற படத்தின் மூலம் தான் அனைவருக்கும்  பிடித்தவராக மனதில் இடம் பிடித்தார்.

தற்போது கரோனா வைரசின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவரால் இயன்ற உதவியை செய்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய தங்கை ரேஷ்மா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு   ppe செட் கருவிகளை வழங்கி உதவியுளளார்.

இதனை அறிந்த விஷால் அவர்கள் தன் தங்கையிடம்  தமிழக மருத்துவமனைக்கு உதவுமாறு கேட்டுள்ளார். இவருடைய தங்கையும் அதனை ஏற்று mcc  மருத்துவமனைக்கு 200 ppe செட் கருவிகளை வழங்கி உதவியுள்ளார். இந்தநிலையில் இன்னும் பல தமிழக மருத்துவமனைகளுக்கு உதவுவதாக முடிவெடுத்துள்ளார்.

Vishal-Sister-Helps-to-TN-Hospital
Vishal-Sister-Helps-to-TN-Hospital
Vishal-Sister-Helps-to-TN-Hospital
Vishal-Sister-Helps-to-TN-Hospital
Vishal-Sister-Helps-to-TN-Hospital
Vishal-Sister-Helps-to-TN-Hospital