எனிமி படத்திற்காக 50 அடி உயரத்திலிருந்து குதிக்கும் காட்சியில் நடித்துக் கொடுத்த விஷால்.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்

0

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்று சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் சக்ரா.

இதை தொடர்ந்து அரிமா நம்பி, நோட்டா மற்றும் இருமுகன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட ஆனந்த் சங்கர் என்பவருடன் முதல் முறையாக விஷால் புதிதாக கூட்டணி அமைத்து எனிமி என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

மிகப்பெரிய பிரம்மாண்ட செலவில் படத்தை இயக்கி வருகிறார்.

ஏனென்றால் இவர் இதற்கு முன்பு பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த படம் வேற ஒரு லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ஆர்யா, டிக் டாக் மிருணாளினி போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

எனிமி திரைப்படத்திற்காக துபாயில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஒரு ஸ்டண்ட் காட்சிக்காக விஷால் 50 அடி உயரத்திலிருந்து கீழே குதிக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது இதற்காக கடுமையான ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம் விஷால்.

அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை பெற்று வருகின்றது படக்குழு. இந்த படம் திரையரங்கில் வெளிவரும்போது இந்த ஒரு காட்சிக்காகவே கூட்டம் அலைமோதும் என கணிக்கப்படுகிறது.

விஷாலுக்கு ஒரு சிறப்பான படத்தை கொடுக்கும் என அவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.