விஷாலின் லத்தி திரை விமர்சனம்.!

0
vishal-laththi
vishal-laththi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால் இவருக்கு தற்பொழுது இந்த வருடம் இரண்டாவதாக வெளிவந்துள்ள திரைப்படம் லத்தி ஏ வினோத்குமார் இயக்கத்தில் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாராகத்தில் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

அதிரடி ஆக்ஷனில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஷாலின் ஆக்சன் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை

இரவு ஒரு நாள் காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வருகிறார் தன்னை ஒருவன் காதலிக்க சொல்லி தொந்தரவு செய்கிறார் என புகார் ஒன்றை அந்தப் பெண் கொடுத்துள்ளார் அந்தப் பெண்ணிடம் விசாரித்து அந்த பையன் வீட்டில் எச்சரிக்கிறார் விஷால்  இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது அடுத்த நாள் காலை அந்த பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் அதன் பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள்.

அங்கு அந்தப் பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் மரணம் வாக்குமூலம் கொடுத்து விட்டு தான் அவர் உயிரிழந்து விடுகிறார்.  ஒரு பக்கம் தன்னை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்த பையனை கைது செய்து விஷால் லத்தியால் அடிக்கிறார் ஆனாலும் அந்த பையன் நான் கற்பழிக்கவில்லை எனக் கூறி விடுகிறான் அதேபோல் லாக்கப்பில் தப்பே செய்யாத அந்த பையனை அடித்து உதைத்ததால் விஷாலுக்கு ஒரு வருடம் இடைநீக்கம் செய்கிறார்கள்.

ஆனால் விஷால் தன்னுடைய உயர் அதிகாரி சிபாரிசை பயன்படுத்தி மீண்டும் ஆறு மாதத்திற்குள் வேலையில் சேர்கிறார். உயர் அதிகாரி வேறு யாரும் கிடையாது  தன்னுடைய நண்பர் பிரபு தான். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் சென்னையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சுறாவின் மகன் வெள்ளை டிஜிபி பிரபுவின் மகளிடம் தவறாக நடந்து கொள்கிறார். இதனை பிரபுவின் மகள் தன்னுடைய தந்தையான டிஜிபி இடம் கூற தான் டிஜிபியாக இருந்தும் தாதா மகனை எதுமே செய்யவில்லை என குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.

ஒரு சமயத்தில் வெள்ளை தனியாக பிரபுவுடன் மாட்டிக் கொள்கிறார் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெள்ளையை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் கொண்டு செல்கிறார் அவனை அடித்து உதைத்து நடக்க முடியாமல் செய்ய வேண்டும் என்பதற்காக விஷாலை வரவழைக்கிறார். ஏனென்றால் விஷால் லத்தி ஸ்பெசலிஸ்ட் என்பதால் இதனை செய்கிறார். வெள்ளையே வெளுத்து வாங்குகிறார் வெள்ளையின் முகத்தை கவர் செய்து அடித்தாலும் அவன் விஷால் முகத்தை பார்த்து விடுகிறார்.

தன்னை விஷால் தான் அடித்தார் என்பதை தெரிந்து கொண்டு அவருடைய குடும்பத்தையும் கண்டுபிடித்து விடுகிறார் வெள்ளை பின்பு விஷாலின் குடும்பத்திற்கு என்ன ஆனது ஒரு கான்ஸ்டேபிள் ஆக இருந்து கொண்டு மிகப்பெரிய தாதாவை எப்படி சமாளித்தார் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

விஷால் வழக்கம்போல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஆனால் இதுவரை செய்யாத அளவிற்கு ஒரு ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளது பிரம்மிப்பை ஏற்படுத்தியது விஷால் தனி மனிதனாக படத்தை முழுவதும் தாங்கி நிற்கிறார் ஒரு கான்ஸ்டபிள் தன்னுடைய உயர் அதிகாரியின் உத்தரவை போல்  எப்படி நடந்து கொள்வாரோ அதே போல் சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக வரும் சுனைனா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் வெள்ளையாக வரும் ரமணா  ஓரளவு நன்றாகவே நடித்துள்ளார் ஆனா வில்லனுக்கு அப்பாவாக நடித்தவர் வில்லனாக இருந்தாலும் படத்தை பார்க்கும் பொழுது வில்லனாக தெரியவில்லையே வினோத்குமார் எடுத்துக் கொண்ட கதைகளும் புதிதாக இருந்தாலும் ரசிகர்களிடையே ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் முதல் பாதி மிகவும் பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி முழுவதும் ஆக்ஷன் ஆக இருந்தது.

சில இடங்களில் ரசிக்கும் படியான ஆக்ஷன் இருந்தாலும் பல இடத்தில் லாஜிக் மீறல் இருந்தது. அதிலும் ஒரு மனிதனின் உடலில் எவ்வளவு கத்தி குத்து வாங்கினாலும் மீண்டும் எழுந்து சண்டை போடுவது  லாஜிக் மீறலாக இருந்தது.  மொத்தத்தில் விஷாலுக்கு ஆக்ஷன் கதை பொருத்தமாக இருந்தது தான் என்று கூற வேண்டும்.