பொம்பள சோக்கு கேக்குதாடா பொம்பள சோக்கு விஷாலின் மார்க் ஆண்டனி ட்ரைலர்.!

mark-antony trailer
mark-antony trailer

Mark Antony : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்த திரைப்படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, ஒய் ஜி மகேந்திரன், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வினோத்குமார் தான் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த ட்ரெய்லர் சுமார் மூன்று நிமிடங்கள் ஓடுகிறது.

டிரைலரில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா காட்சிகளை பார்க்கும் பொழுது படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது அதற்கு காரணம் அவர்களின் நடிப்புதான். இந்த திரைப்படத்தில் விஷால் பல்வேறு கெட்டப்புகளில் நடித்த அசத்தியுள்ளார் அதேபோல் அவருக்கு இணையாக எஸ் ஜே சூர்யா அவர்களும் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார்.

மேலும் சுனில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை இந்த படத்தில் மீண்டும் உயிர் கொடுத்து உள்ளார்கள் மொத்தத்தில் அதிரடி ஆக்சன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாக்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நல்லதில்ல என்னடா கெட்டது இருக்கு கெட்டதுல என்னடா நல்லது என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

அதேபோல் எஸ் ஜே சூர்யா பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு கேங் ஸ்டார் எல்லாம் டிசிப்ளின் வேணும் என எஸ்ஜே சூர்யா மாஸாக வசனம் பேசியுள்ளார் இதோ ட்ரெய்லர்.