தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் இவர் அதிரடி நாயகன் என்று கூறலாம். என்றால் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அதிரடி திரைப்படம் ஆக அமைந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் சமீபகாலமாக வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
விஷால் எப்படியாவது ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என என்னென்னமோ செய்து வந்தார் ஆனால் இதுவரை அவர் கனவு பலிக்காமல் போய் வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஷால் திரைப்படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி னாலும் படம் வெளியாகிய பிறகு எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.
இந்த நிலையில் விஷால் ஏற்கனவே ஹிட்டடித்த மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஸ்கின் பாடத்தை பாதியிலேயே தூக்கி எறிந்து விட்டு வெளியேறிவிட்டார்.
மீதி படத்தை நானே இயக்கி கொள்கிறேன் என விஷாலும் சவால்விட்டு படத்தை சொதப்பி விட்டார். அதனால் விஷால் நடித்தா துப்பரிவாளன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டாலும் பெரிய அளவு வெற்றி பெற முடியாது என தெரிந்து கொண்டு படத்தை OTT இணையதளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இப்படி அவர் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டு வருவதால் எப்படியாவது ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என கட்டாயத்தில் இருக்கிறார். உடன் நடிகர் விஷால் 2012ம் ஆண்டு சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகிய மத கஜ ராஜா என்ற திரைப்படம் கிடப்பிலேயே இருந்து வருகிறது அதனால் அதனை தற்போது கையில் எடுத்து விட்டாராம் விஷால்.
இந்த திரைப்படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து வெற்றி காண வேண்டும் என பிடிவாதத்தில் இருக்கிறார் அதனால் இந்த திரைப் படத்தை ரிலீஸ் செய்ய பெரிய நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். திரைப்படத்தின் டிரைலர் வெளியான போதே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த திரைப்படமாவது விஷாலுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.