பொதுவாக நடிகைகள் என்றாலே குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக அவர்கள் சினிமாவில் நிலைத்து இருக்க முடியும். பிறகு தங்களது அழகு மற்றும் இளமைப்பருவம் குறைந்ததும் முன்னணி நடிகையாக நடிப்பதற்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காது.
எனவே அந்த நடிகைகள் ஒரு சில மட்டும் தான் துணை நடிகை மற்றும் அம்மா கேரக்டர் போன்றவற்றை நடித்து வருவார்கள்.மற்ற சிலர் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.
இவர் மலையாள திரை படத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த வகையில் இவரின் முதல் படமான விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ்,மலையாளம் என்று இரண்டு மொழித் திரைப்படங்களிலும் மாறி மாறி நடித்து வந்தார். பிறகு 2015ஆம் ஆண்டில் கடைசியாக இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்தார்.
அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் இருந்து இவர் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அந்த வகையில் இத்திரைப்படத்தை மலையாள இயக்குனரான சத்தியன் அந்திக்காடு இயக்க உள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளார். இந்நிலையில் மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.