திடீரென விஜய்யை சந்தித்த விஷால்.! காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் விஷால் இவருக்கு தற்பொழுது பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலும் அதையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு தான் உண்டு தனது வேலை உண்டு என்று தனது பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்.

மேலும் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முதல் முறையாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை சரியாக 6:30 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் இடம் இன்று பட குழு காட்டியுள்ளார்கள்.

நடிகர் விஜய் இடம் விஷால் மற்றும் படக்குழுவினர் நேரில் சந்தித்து டீசரை காட்டியுள்ளனர் இதனைப் பார்த்த நடிகர் விஜய் விஷால் மற்றும் படக்குழுவினர்களை பாராட்டியபொழுது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த டீசரை பார்த்துவிட்டு விஜய் பாராட்டியது படக் குழுவினர்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறதாம் ஆனால் எதற்காக விஜய் இடம் சென்று இந்த டீசரை காட்டினார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்றாலும் ரசிகர்கள் பலரும் ஒருவேளை அடுத்த திரைப்படத்திற்கு விஜயுடன் இணை இருக்கிறாரா விஷால் என்று பல கேள்விகளை தற்போது சமூக வலைதள பக்கங்களில் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிப்பதற்கு லியோ பட குழு அணுகியபொழுது நடிகர் விஷால் கால்ஷீட் தர முடியாத சூழ்நிலையில் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.இதனை தொடர்ந்து ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு நடிகர் விஜய் மிகவும் அழகாக இருக்கிறார் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment