தமிழ் நடிகர் ஒருவர் விமானம் ஓட்டும் வீடியோ இணைதளங்களில் மிகவும் பரவலாக வைரலாகி வருகிறது.தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே விமானம் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வைத்திருப்பதாகவும் விமானத்தை சர்வசாதாரணமாக ஓட்டுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நடிகை மாதவியும் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்றுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் வினய் விமானம் ஓட்டும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது அந்த வீடியோ மிகவும் பரவலாகி வருகிறது. வினய்யை திருமணம் செய்யப்போகும் நடிகை விமலா ராமன், இந்த வீடியோக்கு உங்கள் கனவு நிஜமாகிவிட்டது வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்துகிறார்.
தமிழ் திரையுலகில் முதன் முதலாக 2007ஆம் ஆண்டு ‘உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் வினய் அதன்பிறகு ‘ஜெயம்கொண்டான்’ ‘என்றென்றும் புன்னகை’ ‘மிரட்டல்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த வினய் மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படத்தில் வில்லனாக மிரட்டினார்.
அதன் பின்னர் ‘டாக்டர்’ ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற திரைப் படத்தில் வில்லனாக நடித்தார். என்பதும் தற்போதும் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் விமானம் ஓட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.