ப்ரோமோஷன்ல கலந்துக் கொண்டா ஒன்னும் கொறஞ்சிட மாட்டீங்க.. நயன்தாராவை வறுத்தெடுத்த விஷால்?

nayanthara
nayanthara

Actor Vishal: படத்தின் ப்ரோமோஷன்காக வராமல் இருப்பது சரியான பழக்கம் கிடையாது என நடிகர் சங்க தலைவரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் மறைமுகமாக நயன்தாராவை தாக்கியுள்ளார். சமீபத்தில் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, அபிநயா, சுனில் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் சக்சஸ் மீட்டிங் வைக்கப்பட்டது. அதில் பேசிய விஷால், மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தான் இழந்தவற்றில் 75% எனக்கு திரும்ப கிடைத்துள்ளது என்றார். மேலும் செய்தி வாசிப்பாளர்களிடம் பேசிய விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற உரிமையியல் நடிகர் நடிகைகள் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகர் விஷால், அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் ஆனால் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு அது கூடுதல் பலமாக இருக்கும் என்றார். மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்கு வருவதால் அவருக்கு ஒன்னும் குறைந்து விடாது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடுரோடு அல்லது தெரு ரோட்டில் நடத்தப்படுவதில்லை. நட்சத்திர ஹோட்டலில் ஏசி அரங்கில் எந்த குறையும் இல்லாமல் தான் நடந்து வருகிறது. அதனால் சம்பளம் வாங்கினோமா? அடிச்சோமா? என்று தெனாவெட்டா இருக்கும் நடிகைகள் பற்றி ஒரு தயாரிப்பாளராக நான் வேதனைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். எனவே இவர் மறைமுகமாக நயன்தாராவை தாக்கி பேசி உள்ளார் என கூறி வருகின்றனர்.