தளபதி 67-இல் விஷாலா..? எதிர்பார்ப்பை எகிற வைத்த லோகேஷ் கனகராஜ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பது மட்டுமில்லாமல் குஷ்பூ போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

எது எப்படியோ இந்த திரைப்படத்தை விட அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது ஏனெனில் அந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க இருப்பது தான் இந்த திரைப்படத்தின் சிறந்த அம்சம்.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கம் திரைப்படங்கள் அனைத்துமே மல்டி ஸ்டார் திரைப்படமாக அமைவது வழக்கம் தான் அதேபோல இவர் திரைப்படத்தின் கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் ரசனைக்கு ஏற்றவாறு அமைவதே  இவருடைய திரைப்படத்தின் வெற்றிக்கான காரணம்.

அந்த வகையில் இவர் இயக்க போகும் 67 வது திரைப்படத்தில் தளபதி விஜய் உடன்  பல்வேறு பிரபலங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் பல சின்னதிரை நட்சத்திரங்களும் இந்த திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது மட்டுமில்லாமல் பிக் பாஸ் பிரபலங்களும் இந்த திரைப்படங்களில் இணைய உள்ளார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் முக்கிய நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் அவர் வேறு யாரும் கிடையாது பிரபல முன்னணி நடிகர் விஷால் அவர்கள் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து இவை வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment