விஷால் மாஸ்.. எஸ் ஜே சூர்யா கொல மாஸ்..”மார்க் ஆண்டனி முழு விமர்சனம் இதோ

Mark Antony : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி. படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது நடிகர் விஷால் எஸ் ஜே சூர்யாவுடன் கைகோர்த்து ரிது வர்மா, சுனில், செல்வராகவன், ஒய் ஜி மகேந்திரன்..

நிழல்கள் ரவி என பல திரைப் பட்டாளங்கள் நடித்தனர். படம் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் விமர்சனம் குறித்து பார்ப்போம்.. நிகழ்காலத்தில் இருக்கும் விஷாலுக்கு செல்வராகவன் உருவாக்கிய ஒரு  டைம் டிராவல் மெஷின் கிடைக்கிறது.

அம்மா இறந்ததை நினைத்து ரொம்ப கஷ்டப்படும் விஷால் தனது அப்பா தான் அம்மாவை கொன்று இருக்கிறார் அவரை பழிவாங்க வேண்டும் என டைம் ட்ராவல் மிஷின் மூலம் பின்னோக்கி சென்று தனது அப்பாவை பழிவாங்க முயற்சி செய்கிறார் அதனால் நடக்கும் பிரச்சனைகளை சந்தித்து கடைசியில் தனது அப்பாவை கொன்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை..

படத்தில் விஷால் தந்தை, பையன் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்துள்ளார் எஸ். ஜே. சூர்யா சமீபகாலமாக வில்லனாக நடித்து மிரட்டுகிறார் ஆனால் இந்த படத்தில் வில்லனாக மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் காமெடியிலும் பின்னி பெடல் எடுத்துகிறார். அதேபோல செல்வராகவன், சுனில் ரிது வர்மாவும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்துள்ளனர்.

சில்க் சுமிதா சீன் செம்ம ஹைலைட்.. படத்தில் உள்ள பாடல்கள், இசை என அனைத்திலும் ஜிவி பிரகாஷ் புகுந்து விளையாண்டு உள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைம்  டிராவல் கதையை கனக்கச்சிதமாக எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் மொத்தத்தில் மார்க் ஆண்டனி   திரைப்படம் 4/5 மதிப்பெண் பெற்றுள்ளது.