இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா.? அதுவும் தற்போது இவர் முன்னணி நடிகர்.!

நடிகர் விஷால் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல ஹிட் திரைப்படங்கள் கொடுத்தார். பின்பு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலும் தனது பணியை செய்து வந்தார்.

இந்த நிலையில் விஷாலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் ஒரு படத்தின் புகைப்படம் ஆகும். நமக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம் விஷாலின் முதல் திரைப்படம் செல்லமே என்று தான். ஆனால் நடிகர் விஷால் குழந்தை நட்சத்திரமாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

1989 நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ஜாடிக்கேத்த மூடி. இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷால் ஒரு பாடலில் நடித்துள்ளார். மேலும் திரைப்படத்தை விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் விஷாலின் முதல் திரைப்படம் ஜாடிக்கேத்த மூடி தற்பொழுது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

Leave a Comment