விஷாலின் எனிமி திரைப்படத்தின் புதிய அப்டேட்.! ரசிகர்கள் குஷி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷால் இவர் செல்வம் என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார்.

அதன்பிறகு சண்டக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் இவர் அனைவராலும் அறியப்பட்டார். இந்த திரைப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் நடிப்பதற்கு முன்பாகவே அர்ஜுனிடம்  வேதம் மற்றும் ஜெர்மனி ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

இவர் கடைசியாக நடித்த திரைப்படம் மருது,கதகளி,கத்தி சண்டை,துப்பறிவாளன்,சண்டக்கோழி 2,இரும்புத்தலை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்ட் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷால் மற்றும் ஆர்யா இருவரும் எதிரும் புதிருமாக நடிக்கும் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.நடிகர் ஆர்யா சமிபத்தில்தான் சார்பட்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை ஒடிடி தளத்தில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் குத்து சண்டையை மையமாக கொண்டது. ஆர்யா அவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

எனிமி படத்தின் 2வது சிங்கிள் tum tum என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment