சினிமாவை தாண்டி அறகட்டளை மூலம் நல்லது செய்யும் விஷால்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பின் தயாரிப்பாளர் இயக்குனராக அவதாரம் எடுத்து தற்போது சினிமாவுலகில் வெற்றி நடை கண்டு வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தொடர் ஹிட் படங்களை கொடுத்ததால் இவர் சினிமா உலகில் முக்கிய நபராக பார்க்கப்பட்டார் அதை தக்க வைத்துக் கொள்ள இவர் தொடர் படங்களில் நடித்தாலும் கதையம்சம் சரியாக எடுத்து நடிக்காததால் பெரும் தோல்விப் படங்களே இவருக்கு சமீபகாலமாக கிடைத்தன.இருந்து மீண்டு வர தற்போது விஷாலும் போராடி வருகிறார்.

ஒரு ஹிட் படத்தை கொடுத்தால் அதை வைத்து அடுத்தடுத்து ஹிட் படத்தை கொடுத்து தன்னை ஏற்றுக் கொள்ள தற்போது முயற்சித்து வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது நடித்துள்ள “எனிமி” திரைப்படம் தான் அவரது கையில் இருக்கும் அதை வெற்றிப்படமாககொடுக்க முயற்சிக்கிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 31 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பின்பு டிம்பிள் ஹயாத்தியை தட்டி தூக்கி உள்ளது படக்குழு இதனால் படத்திற்கான அதிகரிப்பு தற்போது அதிகரித்துள்ளதால் விஷாலும் செம்ம குஷியில் இருக்கிறார்.

இது இப்படி இருக்க தேவி அறக்கட்டளை மூலமாக பல ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார்.

அதுபோல கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் மக்கள் பலரும் உணவின்றி தவிக்கின்றனர் மேலும் சாலை ஓரத்தில் இருக்கும் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவுகளை வழங்கி வருகிறது அந்த தொண்டு நிறுவனம். மேலும் சாலை ஓரத்தில் இருக்கும் நாய்களுக்கும் உணவுகளை கொடுத்து வருகிறது.

அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment