விஷாலின் சக்ரா டிரைலரில் மிரட்டும் வில்லன் யார் தெரியுமா.? லீக் ஆன தகவல்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால், இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் சக்ரா, இந்த திரைப்படம் ஆன்லைனில் மோசடி செய்பவர்களை தோலுரித்து காட்டும் விதமாக இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.

இதற்கு முன் வெளியாகிய துப்பறிவாளன், இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. சக்ரா திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார் அதே போல் எம் எஸ் ஆனந்தன் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஹேக்கர் வில்லனாக நடித்திருப்பவர் முகமூடி அணிந்து இருப்பதுபோல் ட்ரைலரில் காண்பிக்கப்பட்டது, அந்த ரோலில் யார் நடித்து இருப்பார் என்று பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரெஜினா கசாண்ட்ரா என்பது பல கோலிவுட் பிரபலங்களுக்கு தெரியும்.

இந்த திரைப்படத்தில் ரெஜினா வில்லியாக நடித்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது, சக்ரா படத்திலிருந்து அடுத்து வெளியாகும் போஸ்டர் அல்லது ட்ரெய்லரில் ரெஜினாவின் கதாபாத்திரம் தெரிய வரும் என தெரிகிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள மெயின் வில்லன் யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் சக்ரா திரைப்படம் 4 மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் விஷாலின் மாஸ்டர் பிளான் என்னவென்றால் தமிழக ரசிகர்களை கவர விஷாலும், கனடா ரசிகர்களை கவர சதா ஸ்ரீநாத்தும், டோலிவுட் ரசிகர்களை கவர ரெஜினாவும், அதேபோல் மலையாள ரசிகர்களை கவர்வதற்காக மலையாள சினிமாவில் பிரபல இளம் நடிகர் தான் வில்லனாக நடித்துள்ளார் என கூறுகிறார்கள்.

ஆனாலும் சிலரோ சக்ரா படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் எனவும் கூறுகிறார்கள் அதாவது ஒரு விஷால் வில்லனாகவும் மற்றொரு விஷால் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என கூறப்படுகிறது, இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த அப்டேட்டில் வெளியாகும் என தெரிகிறது.