விஷால் பிறந்தநாளுக்கு ஏழை மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘செல்லமே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் விஷால். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

அதன் பிறகு இவரது நடிப்பில் சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, போன்ற பல வெற்றிப் படங்களை  தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால் அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதியான இன்று தமிழகமெங்கும் மாவட்டத்திற்கு உட்பட்ட நகரங்களில் உள்ள மக்கள் நலன்  இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு பயன் பெரும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக விஷால் அவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

அந்த வகையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் மக்களை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற செயல்பாடுகளுடன் மக்களுக்கு பயன்படும் வகையில் நலத்திட்டங்கள் செய்து வருகிறார் நடிகர் விஷால்.

vishal
vishal

அது மட்டுமல்லாமல் விஷாளின் பிறந்த நாளை முன்னிட்டு காமன் டிபி இந்த தலைப்பில் ஹாஸ்டேக் மற்றும் புகைப்படமும் இந்தியாவில் 12 நிமிடங்களில் ட்விட்டரில் வெளிவந்து முதலிடம் பிடித்தது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் விஷால் அவர்கள் பிறந்தநாளில் சென்னையில்  கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்ச்சி ஹோமில் ஆதரவற்ற முதியோருக்கு உணவு  வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல் இவருடன் சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சீனு, தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Comment