நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில், நடிகர் விஷால் தற்போது ‘ஆக்சன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரும் நடிக்கின்றனர். மேலும் யோகி பாபு, கபீர் துஹான் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.