விஷாலின் ஆக்ஷன் திரைவிமர்சனம்.!

0

நடிகர் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஆக்சன் எனது திரைப்படத்தில் தமன்னா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ராம்கி, கருப்பையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஆக்சன் வெற்றி பெற்றதா என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை

விஷால் மிலிட்ரியில்  ஒரு முக்கிய பதவியில் இருக்கிறார் இவரின் அப்பா கருப்பையா முதலமைச்சராக நடித்துள்ளார், விஷாலின் அண்ணனாக ராம்கி நடித்துள்ளார். ராம்கி அடுத்த முதலமைச்சராக ஆகவேண்டும் என மிகவும் ஆசைப்படுகிறார் அதற்காக பிரபல அரசியல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து மாநாடு நடக்கிறது இந்த மாநாட்டில் குண்டு வெடித்த அரசியல் தலைவர்கள் உயிர் இழந்து விடுகிறார்கள், இந்தப் குண்டுவெடிப்பு விஷால் குடும்பத்தின் மீது விழுகிறது அதிலிருந்து எப்படி குடும்பத்தை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் விஷால் ஒன் மேனாக படத்தை கொண்டு சென்றுள்ளார் விஷால் படம் முழுக்க ஓடுவதும் பறக்கும் இருந்தாலும் அது விஷாலுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விஷாலின் காதலியாக சிறப்பாக நடித்துள்ளார், நடிகை தமன்னா ஒருதலை காதலாக விஷாலை காதலித்து வருகிறார். விஷாலுக்கு உதவியாக இரண்டாம் பாதி முழுவதும் வலம் வருகிறார் தமன்னா. அதேபோல் ராம்கி கருப்பையா ஆகியோர் இப்படத்தில் சிறப்பான வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார் பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது, மேலும் இந்த திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் dudly. படத்திற்கு ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார், படத்தில் நேரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

சுந்தர் சி படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படம் முழுக்க ஆக்ஷன் ஆக கொண்டு சென்றுள்ளார், படத்தின் சண்டைக் காட்சிகளை மிகவும் பிரமாதமாக படமாக்கியுள்ளார். படம் முழுக்க ஆக்ஷன் ஆக இருப்பதால் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது அதுமட்டுமில்லாமல் படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன.

ஆக்சன்: 2.75 / 5