உணர்ச்சி பூர்வமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் விருமன் பட அபிராமி.! இயக்குனர் யார் தெரியுமா.?

0
abirami
abirami

கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் வெளிவந்த விருமான்டி படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை அபிராமி. இவர் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் பெரிதாக இவருக்கு தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது தமிழுக்கு கம்பேக் கொடுக்க இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ரோமியோ ப்ரெக்சஸ் சார்பில் யூட்யூப் பிரபலம் இயக்குனர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படம் தான் பாபா பிளாக் ஷீப் இந்த படம் பள்ளி குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் மூலம் தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விருமாண்டி நடிகையா அபிராமி அறிமுகமாக உள்ளார்.

அதாவது பள்ளி குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள் அவர்களுடைய இன்பங்கள், துன்பங்கள் என அனைத்தையும் உணர்ச்சி பூர்வமாக ஒரு அழகான பகுதியாக உருவாக்குவதற்காக இயக்குனர் முடிவெடுத்துள்ள நிலையில் அப்படிதான் பாபா பிளாக் ஷீப் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் அம்மாவாக முக்கிய வேடத்தில் நடிகை அபிராமி நடிக்க இருக்கிறார்.

மேலும் ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சியில் இந்த படத்தினை உருவாக்க இருக்கும் நிலையில் இது குறித்து இயக்குனர் ராஜ்மோகன் சமீப பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறுகையில், பாபா பிளாக் ஷீப் பள்ளி குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான ட்ராமா இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது அக்காதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்களை அணுகினேன் கதை கேட்ட உடன் அவருக்கு மிகவும் பிடித்து நான் நடிக்கிறேன் என்றார்.

படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல் என்னிடம் கருத்து கேட்டு அவரது கதாபாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். மிகவும் உணர்ச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து மொத்த பட குழுவும் கண்கலங்கி எழுந்து கைதட்டியது. அந்தக் காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் பொழுது கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள்.

இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திறப்புமுனை படமாக இருக்கும்.. படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டோம் படத்தில் மதுரை முத்து, ஆர்.ஜே விக்னேஷ் காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்கரவர்த்தி, போஸ் வெங்கட் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திப்போம் என்றார்.