ஜோதிகாவை கழட்டிவிட்ட சூர்யா.? யுவன் ஷங்கர் ராஜாவை அசிங்கப்படுத்திய விருமன் பட குழு.!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கார்த்தியும் முத்தையாவும் இணைந்துள்ளனர். இந்த படத்தை  சூர்யா, ஜோதிகா இவர்களின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2D என்டர்டைன்மெண்ட் தயாரித்த அனைத்து திரைப்படங்களிலும்  சூர்யா ஜோதிகா என்று டைட்டிலில் பெயர் வரும் ஆனால் விரும்பன் படத்தில் தயாரிப்புக்கு கீழ் சூர்யா என்ற பெயர் மட்டும் தான் வந்தது ஜோதிகாவின் பெயரை காணவில்லை. ஏனென்றால் இந்த படம் மசாலா கலந்த திரைப்படமாக உள்ளதால் ஜோதிகாவின் பெயரை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இதைப் பற்றி ஜோதிகாவும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கொம்பன் சாயலில் இருப்பதாக பலரும் விமர்சித்த நிலையில் வின்னர் படத்தை காப்பி அடித்தார் சூரி என்று விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் விருமன் படத்தில் ஆரம்ப ஸ்டேஜில் இருந்து சூரி அவர்கள் முழுக்க முழுக்க வின்னர் படத்தில் வரும் வடிவேலு போலவே நடந்து கொள்வார் இதை கண்ட பலரும்  வடிவேலுவை அப்பட்டமாக காப்பி அடித்து உள்ளார் என்று விமர்சித்து வருகின்றனர்.

மேலும் விருமன் படத்திர்க்கு  யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் ஜோதிகா பெயர் நீக்கியது போல விரும்பன் பட குழு யுவன் சங்கர் ராஜா பெயரையும் நீக்கி உள்ளனர். இதனால் கடுப்பான யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் விருமன் பட குழுவினரை விமர்சித்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் புதுமுக நடிகைக்கு பிரமோஷன் செய்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த படத்தில் இசையமைத்த இசையமைப்பாளருக்கும் அதே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதுதானே எனவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.மேலும் யுவன் ரசிகர் ஒருவர் யுவன் பெயரே டைட்டிலில் வரவில்ளை அவருடைய பெயரை முதலில் போடுங்கள் என்று கேட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் யுவனுக்காக மட்டும்தான் படம் பாக்கவே வந்தேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment