ஆத்தாடி முதல் படமே இன்னும் ரிலீஸ் ஆகல அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா ஷங்கர் மகளுக்கு.!

வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தனது முதல் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்குள் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் தான் நடிகை அதிதி சங்கர்.இவர் இயக்குனர் சங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் சூர்யா 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்திக் ஜோடியாக விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

முதல் படத்திலேயே பிரபல நடிகருக்கு ஜோடி சேர்ந்து அறிமுகமாகிவுள்ளார் இதன் காரணமாக இவருக்கு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். மேலும் இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுதே பெரிய நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அது ஒரு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி வருவதால் வளர்ந்து வரும் நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திவுள்ளார். அந்த வகையில் தற்பொழுது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிதீஷங்கள் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற திரைப்படத்தில் கமிட்டாக இருக்கிறார்.

இது பல நடிகைகளுக்கு பொறாமையாக இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தனது தந்தை பெரிய இயக்குனர் மிகவும் பிரபலமானவர் என்பதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதன் காரணமாக பல முன்னணி ஹீரோக்கள் அதிதியை தங்களுடைய திரைப்படங்கள் நடிக்க வைக்க ஆரவம் காட்டி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சூர்யா தயாரித்துள்ள விருமன் திரைப்படத்தில் அதிதி சங்கருக்கு கொடுத்த சம்பளம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஒரு நடிகை தனது அறிமுக திரைப்படத்தில் நடிப்பதற்காக அதிகபட்சம் ஒரு லட்சம் வாங்குவார்கள் பெரும்பாலும் நடிகைகளுக்கு அது கூட கிடைக்காது.

ஆனால் அதிதி சங்கரின் மகள் என்பதால் தான் அவருக்கு சூர்யா 25 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என சமீபத்தில் வெளிவந்த பாடல்களின் மூலம் தெரிய வருகிறது.

Leave a Comment