விருமன் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த விஜயின் மனைவி.! வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம்

நடிகர் கார்த்திக்  முத்தையா இயக்கத்தில் இரண்டாவது முறையாக விருமன்  திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்கிற்கு வந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்கள் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். ஏனென்றால் முழுக்க முழுக்க இந்த திரைப்படம் குடும்ப கதையை மையமாக வைத்து உருவாக்கி உள்ளதால் மக்கள் பலரும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விருமன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்த திரைப்படத்தில் முதன்முறையாக ஷங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயின் ஆக அறிமுகமாகியுள்ளார் ஆனால் இவரின் நடிப்பை பார்த்து பல ரசிகர்கள் வியந்துள்ளார்கள் அதனை சமீபத்தில் வீடியோ மூலம் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். இவர் முதன்முறையாக தான் நடிக்கிறாரா என பலரும் வியக்க வியக்க பார்த்தார்கள் அவரை நடிப்பை பார்த்து.

விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் அது மட்டும் இல்லாமல் சூர்யாவும் கலந்து கொண்டார். மேலும் விருமன் திரைப்படத்தில் ராஜ்கிரன், கார்த்தி, அதிதி சங்கர் ,சூரி மனோஜ், பாரதிராஜா, ஆர் கே சுரேஷ், பிரகாஷ் ராஜ் ,மைனா நந்தினி சிங்கம் புலி  என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை ஃபர்ஸ்ட் நாள் முதல் காட்சி பார்ப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான் அந்த வகையில் சமீபகாலமாக கார்த்தியின் திரைப்படத்தை முதல் காட்சி முதல் நாளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்  மேலும் சினிமா பிரபலங்களும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அப்படிதான் விஜய்யின் மனைவி விருமன் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார் அப்பொழுது மீடியா கண்ணில் படாமல் தான் வந்தார் ஆனாலும் அவர் மீடியா கண்ணில் தென்பட்டுவிட்டார் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாக வருகிறது.

இதோ அவரின் புகைப்படம் மற்றும் வீடியோ.

Leave a Comment