பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு செம்ம விருந்து படைத்த விருமன் படக்குழு – வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகர்கள் ஒவ்வொருவரும் கடினமாக உழைத்து வருகின்றனர் ஒரு சில நடிகர்கள் ஆக்சன் படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியை நோக்கி ஒடுவது  வழக்கம் ஆனால் ஒரு சில நடிகர்கள் வித்தியாசமான படங்களின் மூலம் மக்களை சந்தோஷப்படுத்த இதோடு மட்டுமல்லாமல் இன்னும் கவர்ந்து இழுக்க கடினமாக நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் சூர்யாவைத் தொடர்ந்து அவரது தம்பி நடிகர் கார்த்தியும் தமிழ் சினிமாவில் இதுவரை பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார் அதனால் இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார்.

அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுதும் பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அந்த வகையில் இவரது கையில் பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன இந்த திரைப்படங்கள் நல்லதொரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏனென்றால் மூன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக விருமன் திரைப்படம் அடுத்த பருதிவீரன் போல இருக்கும் என தெரியவந்துள்ளது ஏனென்றால் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது.

ஆள் பார்ப்பதற்கும் வித்தியாசமான ஒரு கிராமத்து கெட்டப்பில் தான் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன அதனை உறுதிப்படுத்தும் வகையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு விருமன் படக்குழுவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அசத்தி உள்ளது இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

viruman
viruman

Leave a Comment