கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடையே மீண்டும் வெடித்தது பிரச்சனை.? இது எங்க போய் முடியுமோ.!

0
virath rohit
virath rohit

இந்திய அணியில் top batsman என்றால் அது விராத் கோலியும் ரோஹித் சர்மாவும் தான், இந்த நிலையில் விராத் கோலி கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனம் இருந்து வருகிறது அதேபோல் ரோகித் சர்மாவின் கேப்டன்சி அனைவரையும் கவர்ந்தது.

ஆசிய உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி சரியாக ஆடாத நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து அணியை வழிநடத்தி ஆசிய கோப்பை வென்று கொடுத்தார், இதற்கு முன் நிதாஹஸ் டிராபி டி20 தொடரையும் ரோகித்சர்மா இந்தியாவிற்கு வென்று கொடுத்தார் இப்படி ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

அதன்பிறகு ஆசியக் கோப்பை வென்ற பிறகு ரோகித் சர்மா அதிரடியாக ஒரு பேட்டி கொடுத்தார் அதில் என்னை முழு நேர கேப்டனாக நியமித்தல் சிறப்பாக செயல்பட தயார் என கூறினார், அந்த தருணத்தில் இருந்தே ரோகித் சர்மாவும் விராட் கோலிக்கும் பனிப்போர் தொடர்வதாக தெரிகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி தோல்விக்குப் பிறகு ரோகித் சர்மா மற்றும் கோலி மீண்டும் விவாதம் எழுந்துள்ளது, கேப்டன் கோலி துணை கேப்டன் ரோகித் சர்மாவின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும் அதன் எதிரொலி தான் ரோஹித் மற்றும் கோலி என இரண்டு கேங் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன, இந்த நிலையில் ரோகித் சர்மா ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராத் கோலியை unfollow செய்துள்ளார், ஆனால் தற்போது விராத் கோலியின் மனைவி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவையும் Unfollow செய்துள்ளார், இது ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடையே பனிப்போர் இருப்பதாக கூறும் பலருக்கு இறையாக இந்த செய்தி கிடைத்துள்ளது.

இருவருக்கும் மோதல் இருப்பதால்தான் ரோகித் சர்மா இதுபோல் செய்ததாக கூறுகிறார்கள், இதுபற்றி பிசிசிஐயின் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் இடம் கேள்வி கேட்டபோது. இது எல்லாம் ஊடகங்கள் ஆகிய நீங்கள் தான் இது போல் கிளப்பி விடுகிறார்கள் என டைம்ஸ் நவ்வில் தெரிவித்துள்ளது. ஆனால் ரசிகர்களோ இருவருக்கும் சண்டை இல்லை என்றால் அனுஷ்கா சர்மாவை ஏன் ரோகித் சர்மா unfollow  செய்கிறார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.