விராட் கோலி ரோகித் சர்மா மோதல் பற்றி முதல்முறையாக வாய் திறந்த கபில்தேவ்.!

0
Virat-Kohli-and-Rohit-Sharma
Virat-Kohli-and-Rohit-Sharma

உலக கோப்பையை வெல்லும் அணியாக இந்திய அணியை அனைவரும் எதிர் பார்த்தார்கள் ஆனால் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது, இந்திய அணியில் நான்காவது இடத்தை நிரப்புவதற்காக சில வருடங்களாக சிறந்த பேட்ஸ்மேன் தேடியது ஆனால் இன்னும் அதற்கான விடை கிடைக்கவில்லை.

அதன் எதிரொலி தான் உலக கோப்பை போட்டியில் இந்தியா தோற்றது, மேலும் உலக கோப்பை போட்டியில் இருந்து நாடு திரும்பிய இந்திய அணியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின, அதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டு பிரிவுகளாக அணி பிரிந்து கிடைக்கிறது எனவும் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் ஆலோசனையை காதில் வாங்காமல் தன்னிச்சையாக முடிவு செய்கிறார் விராட் கோலி என்றும் தகவல் வெளியாகின.

மேலும் இவர்களின் பஞ்சாயத்து அணியிலும் எதிரோளித்ததாக ஒரு தகவல் வந்தது, அது மட்டுமில்லாமல் உலக கோப்பை சமயத்தில் 15 நாட்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை பிசிசிஐ தங்க வைத்துக் கொள்ள அனுமதி தந்திருந்தது, ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து முழுவதும் தனது மனைவியை தங்க வைத்திருந்தார், இதனை ரோஹித் சர்மாவிடம் விராத் கோலி கேட்டுள்ளார் அங்கிருந்து தான் பிரச்சனை வெடித்ததாக ஒரு தகவல் வெளியாகின, ஆனால் அதற்கு முன்பே விராத் கோலி ரோஹித் சர்மாவுக்கும் பனிப்போர் அனைவராலும் பேசப்பட்டு வந்தது.

அதனால் இந்த உலகக் கோப்பை போட்டியில் தான் இவர்களுக்கு பிரச்சினை என்று கூற முடியாது இந்த நிலையில் westindies சுற்றுப்பயணம் செல்ல இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ரோகித் ஷர்மாவிடம் மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த விராட் கோலி எங்களுக்குள் எந்த மோதலும் கிடையாது என பதில் அளித்தார்.

அதேபோல் ரோகித் ஷர்மாவுக்கும்  விராட் கோலிக்கும் எந்த ஒரு மோதலும் கிடையாது எனமுன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் முதல் அக்தர் வரை ஒரு கருத்தை தெரிவித்தார், இந்த நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மோதல் பற்றி கூறியுள்ளார், அவர் கூறியதாவது களத்திற்கு வெளியே கருத்து முரண்பாடு இருக்கலாம், இருவரது அணுகுமுறையும் வேறுபடலாம் ஆனால் அணிக்காக விளையாடும் போது களத்தில் இறங்கி விட்டால் வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமோ அது தான் அவர்களின் சிந்தனையாக இருக்க வேண்டும். கருத்து முரண்பாடு என்பது ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவதில் இல்லை அவரவர் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.