ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி வைரலாகும் வீடியோ.!

o solriya
o solriya

சமீப காலமாக தெலுங்கில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடலும் ரசிகர்களிடையே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுன் ஆகியோர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி, என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதொ இல்லையோ ஆனால் சமந்தா நடனம் ஆடிய சொல்றியே மாமா பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார்கள் அந்தவகையில் ரசிகர்களும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி கலந்துகொண்டுள்ளார்.

அந்த விருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சமந்தா புஷ்பா திரைப்படத்தில் நடனமாடிய ஓ சொல்றியா மாமா பாடலுக்கு விராட் கோலி மற்றும் பல பிரபலங்கள் நடனமாடிஉள்ளார்கள்  அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. மேலும் புஷ்பா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது மீண்டும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.