விராட் கோலி டுவிட்டும் .! தோனியின் ஓய்வும்.?

0
dhoni
dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி உலக கோப்பை போட்டியுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியுடன் இந்தியா தோற்று வெளியேறியது, ஆனால் தோனியின் ஓய்வு பற்றி எதையும் கூறவில்லை.

அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக போட்டியில் தோனி கலந்து கொள்ளாமல் இரண்டு மாதம் ஓய்வில் இருந்தார். அந்த சமயத்தில் தோனி இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்று வந்தார் அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் தோனி இடம்பெறவில்லை.

இந்த நிலையில் தோனி இன்று இரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, அதனால் தோனி தனது ஓய்வை பற்றி அறிவிக்கப் போகிறார் என கூறப்பட்டது, ஏற்கனவே தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கான பதில் இன்று இரவு தெரியும்.

இதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர் ஆக இருந்த யுவராஜ் திடீரென செய்தியாளர்களை சந்தித்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டரில் தோனியை திடீரென புகழ்ந்து பதிவிட்டிருந்தார், அதில் தோனி விளையாடிய அந்த போட்டியை தன்னால் மறக்க முடியாது எனவும் அது ஒரு ஸ்பெஷல் நைட் எனவும் பதிவிட்டுள்ளார், மேலும் தோனி தன்னை பிட்னஸ் டெஸ்ட் போன்ற ஓட வைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

தோனியின் ஓய்வு பற்றி விராட் கோலி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள், அதனால் தோனி ரசிகர்கள் ஓய்வு வேண்டாம் என சமூக வளைதளத்தில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.