விளம்பர படத்தில் நடித்தற்காக கைது செய்யப்படும் விராட் கோலி,தமன்னா.? இப்படி கூட பிரச்சினை வருமா

இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக சிறப்பாக விளையாடி வந்து கொண்டிருப்பவர் விராட் கோலி இவர் விளம்பர படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த விளம்பரப்படம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அது போல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா அவர்களும் இது போன்ற விளம்பர படத்தில் நடித்ததால் இவரும் இதில் தற்பொழுது சிக்கியுளளார்.வேறு எதுவும் இல்லை சூதாட்ட விளம்பரங்களில் இவர்கள் இருவரும் நடித்ததால் தற்பொழுது இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்பொழுது லாக்டவுன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் போரடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர் வரை இணையதளத்தில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர் எனவே கூற வேண்டும் அதிலும் குறிப்பாக சிறுவர்கள் சூதாட்டத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

சூதாட்ட விளம்பரங்களில் நடித்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சூரியபிரகாஷ்.

Tamannaah
Tamannaah

இந்த வழக்கு நீதிபதிகள் ஹேமலதா மாற்றும் சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்துள்ளனர். இதை அறிந்த விராட் கோலியின் ரசிகர்கள் இப்படி கூட பிரச்சினை வருமா என கூறி புலம்பி வருகின்றனர்.

Leave a Comment