என்னால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.! தன்னுடைய ஓய்வு பற்றி விராட்கோலி கொடுத்த ஷாக்.!

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருக்கும் விராட் கோலி இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதால் விராட் கோலிக்கு பணிச்சுமை மற்றும் களைப்பு ஆகியவை ஏற்படுகிறது என்று வெளிப்படையாகவே பல ஊடகங்கள் முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகள் 3 வடிவத்தில் அதிக போட்டிகள் இருப்பதாகவும் அதன் பிறகு ஏதாவது ஒரு தொடரில் ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பது என சூசகமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். விராட்கோலி இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது. அடுத்த மூன்று ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்கள் வருகின்றன இந்த மூன்று தொடர்களும் மிக முக்கியமான தொடர்.

அதனால் இந்த மூன்று உலகக் கோப்பை பற்றி அதிக அளவில் யோசிக்கிறேன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு வேறு மாதிரியான உரையாடலில் நாம் ஈடுபடுவோம் என கூறியிருந்தார். எனவே இதன்மூலம் விராட்கோலி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஏதாவது ஒரு வகையான கிரிக்கெட் போட்டிக்கு ஓய்வு கொடுக்க நினைத்து இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

virat kohli
virat kohli

மேலும் விராத் கோலி கிரிக்கெட் விளையாட வந்து 10 வருடங்கள் மேலாகிவிட்டது ஆண்டுக்கு 300 நாட்கள் கிரிக்கெட் மைதானத்தில் தான் செலவிடுகிறேன் பயிற்சி பயணம், அமர்வு போட்டி என எல்லாத்தையும் சேர்த்து நான் சொல்கிறேன். இப்படி விளையாடுவது உடலை பதம் பார்க்கும் மேலும் இதுகுறித்து வீரர்களும் யோசிக்காமல் இல்லை. இது அனைத்தும் அவசியம் என்பதால் நாங்கள் விளையாடுகிறோம்.

மேலும் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் இது குறித்து யோசிக்க வேண்டும் அதிக போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு அவசியம் 34-35 வயதில் உடல் தாங்காது என்ற நிலை வரும் பொழுது நாம் வேறு மாதிரியான உரையாடலில் ஈடுபடுவோம் என கூறினார்.அடுத்த மூன்று வருடங்களுக்கு எனக்கு எந்த சிக்கலும் இல்லை அதன்பிறகுதான் விளையாடுவதில் சிக்கல் ஏற்படும் என்று மறைமுகமாக கூறியுள்ளார் விராட்கோலி.

அதனால் விராத் கோலி நிச்சயம் 2023 உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஏதாவது ஒரு வகை போட்டியில் ஓய்வு அறிவிக்கலாம் என தெரிகிறது.

Leave a Comment