கிரிக்கெட் தாதா கங்குலியை முந்திய விராத் கோலி.! தன்னை தானே கிண்டல் அடித்துக்கொண்ட சஹால்

0
virat kohli
virat kohli

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வழி நடத்திய பிறகு இன்றுடன் விராட் கோலிக்கு 50 டெஸ்ட் போட்டிகளை வழிநடத்திய இரண்டாவது இந்திய கிரிக்கெட் கேப்டன் என்ற பெருமையை அடைந்துவிட்டார்.

49 டெஸ்ட் போட்டிகளை வழிநடத்திய கங்குலியை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டார் விராட் கோலி இதனை பிரபல கிரிக்கெட் வீரர் சஹால் தனது ட்விட்டரில் தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அதேபோல் சஹால் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறவில்லை இவர் தன்னை தானே கிண்டல் அடித்துக்கொண்டு ட்விட் செய்துள்ளார், அவர் கூறியதாவது வாழ்த்துக்கள் சகோ என்னை விட 50 போட்டிகள் தான் அதிகம், என டுவிட்டரில் கூறியுள்ளார்.

அதேபோல் விராட் கோலி 58 சதவீதம் வெற்றி பெற்று மிகச் சிறந்த வெற்றி கேப்டனாக இருக்கிறார், 2014 முதல் இந்தியாவை 29 வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார், அதேபோல் இந்தியாவை 50 போட்டிகளுக்கு மேல் வழிநடத்திய ஒரே கேப்டன் தோனிதான் அவர் 2008 முதல் 2014 வரை 60 டெஸ்ட் போட்டிகளில் நடத்தியுள்ளார், அதேபோல் முன்னாள் கேப்டன் கங்குலி 2000 முதல் 2005 வரை 49 டெஸ்ட் போட்டிகளை வழி நடத்தியுள்ளார்.