சாதனைகளை சரித்திரமாக மாற்றிய கோலி.! தோனியையே மிஞ்சி விட்டாரே.!

0
virat kohli
virat kohli

இந்திய அணி கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுடிருந்தது அதில் 3 டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றது இதில் டி20 போட்டிகளில் 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டியில் 2-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் போட்டியில்2-0 என்ற முறையில் வெற்றி பெற்றது.

மேலும் கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்ததால் எளிதாக வெற்றி பெற முடிந்தது, குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்தது, அதேபோல் டெஸ்ட் தரவரிசையில் டாப் 10க்குள் ஏழாவது இடத்தை பிடித்து விட்டார்.

பேட்டிங் பொருத்தவரை அனைவருமே சிறப்பாக ஆடினார்கள், சாதனைக்கு பெயர்போன விராத் கோலி கேப்டன் சி யில் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார், அதிக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விராத் கோலி 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28 போட்டிகளில் வென்றுள்ளார், முதலிடத்தையும் பிடித்துவிட்டார் இவருக்கு அடுத்தபடியாக தோனி 60 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வென்றுள்ளார், இவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார், அடுத்ததாக கங்குலி 49 போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

மேலும் விராத் கோலி அணியின் வெற்றிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என கூறினார், முதல் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தொடர்ந்து நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.