சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்த விராட் கோலி.!

புது டெல்லியில் பிறந்த விராட் கோலி 2006 ஆம் ஆண்டு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக டெல்லி அணிக்காக விளையாடினார் மலேசியாவில் 2008 ஆம் ஆண்டு நடந்த 19 வயது உட்பட்டவர் விளையாடக்கூடிய போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி வாய்ப்பை தேடி கொடுத்தார்.

அதன் பிறகு சில மாதங்களுக்கு பின்னர் தனது 19 ஆவது வயதில் முதல் போட்டியான இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார் அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய பணியில் விளையாடினார். இவர் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் மட்டுமல்லாமல் பெங்களூர் அணியின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு நாள் பன்னாட்டு தொடர்பாட்டப் போட்டியில் பத்தாயிரம் ரன்கள் எடுத்து ஒரு சாதனையை படைத்திருந்தார் இந்த சாதனை பெரிய அளவில் பேசப்பட்டது இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 ஆயிரம் ரகளை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று சென்றார். இவருடைய இந்த சாதனையை தற்போது ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாக பேசப்பட்டு வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது போல் பல சாதனையை தொடர்ந்து பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் அதுமட்டும் இல்லாமல் கிரிகெட் வீரர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் இந்த 25,000 ரன்கள் அடித்த சாதனையை வெறும் 549 இன்னிங்க்ஸ்களில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின், சங்ககாரா, ரிக்கி பாண்டிங், ஜெயவர்தனே, ஜாக் காளிஷை ஐ தொடர்ந்து 25,000 ரன்களை கடந்த 6 வீரராக உள்ளார் விராட் கோலி.

Leave a Comment