கின்னஸ் பக்ரு மகளை பார்த்திருக்கிறீர்களா.! ஹீரோயின் போல் அழகாக இருக்கிறாரே.. வைரல் புகைப்படம்

சினிமாவிற்கு குள்ள மனிதராக அறிமுகமாகி தன்னுடைய குறையின் மூலம் பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் கின்னஸ் பக்ரு. இவருடைய உண்மையான பெயர் அஜய் குமார் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நிலையில் இவரை கின்னஸ் பக்ரு என அனைவரும் அழைத்தார்கள்.

இவர் 2 அடி 6 அங்குலம் 76 சென்டிமீட்டர் உயரம் உடையவர் என்பதால் கின்னஸ் உலக சாதனையில் வெற்றி பெற்றார். பிறகு மிமிக்கிரி கலைஞராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவருக்கு பிறகு தான் மலையாளத்தில் வினயன் இயக்கத்தில் வெளிவந்த அத்புத தீவுபு என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சீரியல்கள் மற்றும் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிறகு திரைப்படங்கள் இயக்குவதையும் தொடங்கியுள்ளார் அந்த வகையில் திரை உலகில் மிகக் குறுகிய காலமே இயக்குனராக இவர் இருந்த நிலையில் தற்பொழுது பெரிதாக திரைப்படங்களில் ஆர்வம் காமிக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பக்ரு காயத்ரி மோகனை மார்ச் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு தீப்தா கீரித்தி என்ற மகளும் உள்ளார். உண்மையில் தீப்தா கீர்த்தி இவர்களுக்கு இரண்டாவது மகள் அதாவது பக்ரு ஒருமுறை பேட்டியில் தீப்தா கீர்த்திக்கும் முன்பு ஒரு மகள் பிறந்ததாகவும் ஆனால் அந்த குழந்தை இரண்டு வாரங்கள் மட்டுமே வாழ்ந்ததாக கூறியுள்ளார்.

guinness pakru
guinness pakru

இப்படிப்பட்ட நிலையில் கின்னஸ் பக்ரு சமீபத்தில் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவருடைய மகள் ஹீரோயின் போல் அழகாக இருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment