அரசியலிலும் விஜய்க்கு போட்டியாகிறாரா அஜித்? வெள்ளை சட்டை, கண்ணாடி என கலக்கும் வைரல் புகைப்படம்

சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல் போல் அடுத்தடுத்த தலைமுறையிலும் இரு நாயகர்களுக்கான போட்டிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படித்தான் இப்போது விஜய், அஜித் இருவருக்கும் தொழில் ரீதியான போட்டி உச்சகட்டத்தில் இருக்கிறது.

அதன்படி லியோவுக்கு போட்டியாக அஜித்தின் விடாமுயற்சி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் பல தடங்கல்களின் காரணமாக இப்படம் தளபதி 68 உடன் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்கள் அவ்வப்போது மீடியாவில் வெளியாகி தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.

விடாமுயற்சி தொடங்கவில்லையே என்று சோகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இதுதான் ஓரளவுக்கு ஆறுதலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு போட்டோவை பார்த்த பலரும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருக்கின்றனர்.

அதாவது அஜித் அந்த போட்டோவில் வெள்ளை சட்டை, கூலர்ஸ் என்று படு ஸ்டைலாக இருக்கிறார். அதிலும் அரசியல்வாதிகள் போன்று இருப்பவர்களுடன் அவர் போட்டோ எடுத்துக் கொண்டிருப்பது பல விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் தற்போது விஜயின் அரசியல் வரவை தான் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த சூழலில் அஜித் அவருக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று யோசிக்கும் வகையில் இருக்கிறது இந்த போட்டோ. ஏற்கனவே அஜித் அரசியலுக்கு வருவார் என்று சில சினிமா விமர்சகர்கள் சூசகமாக கூறி வரும் நிலையில் இந்த போட்டோவும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ajith-politics
Exit mobile version