ஹச். வினோத் எனக்கு சகோதரர் மாதிரி – நிறைய அட்வைஸ் கொடுப்பார்.! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி.!

தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்களின் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அவர்களும் சும்மா என்று சொல்லக்கூடாது எடுத்தவுடனேயே டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், ஹெச் வினோத்,  போன்றவர்கள் எடுத்த உடனேயே  சிறந்த படங்களை கொடுத்து.. அசத்தியும் வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி படங்கள் தான் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது அதனை தொடர்ந்து விஜயை வைத்து தளபதி 67 என்னும் படத்தை  இயக்க ரெடியாக இருக்கிறார்.

அதற்கான வேலைகளை தான் தற்பொழுது பார்த்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது ஹச் வினோத் பற்றியும் கேள்வி எழுப்பினர் அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் சொன்னது.

சினிமாவில் என் நலம் விரும்பிகளில் ஒருவர். அவர் எனக்கு சகோதரர் மாதிரி நானும் அவரும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம் நான் மாநகரம் படம் இயக்கும் போது அவர் சதுரங்க வேட்டை எடுத்தார் நான் கைதி படம் பண்ணும் போது தீரன் அதிகாரம், மாஸ்டர் பண்ணும் போது வலிமை ..

இப்போ அஜித் 61 தளபதி 67 இப்போதும் நாங்கள் சந்திக்க வாய்ப்புகள் உண்டு அவர் எனக்கு நிறைய அறிவுரைகளை சொல்லிக் கொடுத்துள்ளார் எனவும் லோகேஷ் கனகராஜ் கூறினார். திரைப்படங்களின் மூலம் மோதிக் கொண்டாலும்  நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர் அது ஒரு ஆரோக்கியமான விஷயம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment