நீங்க சாதாரண மச்சான் இல்லை தெய்வ மச்சான்.! விஜய் சேதுபதி வெளியிட்ட விமல் பட டிரெய்லர்.!

vimal
vimal

நடிகர் விமல் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது குறிப்பாக கூற வேண்டும் என்றால் விமல் நடிப்பில் குலசாமி திரைப்படத்தை தொடர்ந்து தெய்வ மச்சான் என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது ஆம் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில்.

விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், பாண்டியராஜன்,பால சரவணன்,முருகானந்தம்,தங்கதுரை,பிக் பாஸ் அனிதா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படம் முழுவதுமே காமெடி கதைகளம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் காட்வின் இசையமைத்துள்ளார் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த டிரெய்லரை பார்க்கும்பொழுது விமல் அட்டகாசமாக நடித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. இந்த டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் பலரும் தெய்வ மச்சான் திரைப்படம் நன்றாக மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெறும்.என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை விமல் தற்பொழுது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

கூடிய சீக்கிரம் அவரும் மிகப்பெரிய நடிகராக வலம் வர வாய்ப்பு இருக்கிறது எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்தத் திரைப்படம் மட்டும் நன்றாக மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று விட்டால் தொடர்ச்சியாக விமல் இன்னும் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் எனவும் கூறி வருகிறார்கள்.