அட நம்ம களவாணிக்கு இப்படி ஒரு மனைவியா? குடும்பம் குட்டியாக இருக்கும் நடிகர் விமலின் புகைப்படம்..!

vimal family photo: பொதுவாக சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை மட்டும் தான் நாம் மனதில் வைத்து இருப்போம் ஆனால் அதற்கு முன்பாகவே அந்த நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்து இருப்பார்கள் ஆனால் அவை எதையும் நாம் பார்த்திருக்கவே மாட்டோம் அந்த வகையில் பல சிறிய ரோல்களில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் விமல்.

இவர் களவாணி, கலகலப்பு வாகை சூடவா போன்ற திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து இருப்பார் ஆனால் அதற்கு முன்பாகவே விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படத்திலும் அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் திரை உலகில் முதன்முதலாக பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இந்த திரைபடத்தை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துவந்த நமது நடிகர் விமல் தற்சமயம் பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விமலுக்கு திருமணம் ஆனது ஒருசிலருக்கு தெரியவே தெரியாது. நடிகர் விமல் களவாணி திரைப்படத்தில் செய்த காரியத்தைதை தான் அவருடைய வாழ்க்கையிலும் செய்துள்ளாராம்.

அதாவது நடிகர் விமல் அவருடைய தோழியான அக்ஷயாவை தான் திருமணம் செய்துள்ளாராம் அக்ஷயா டாக்டர் படிப்பு படிக்கும் பொழுது அடிக்கடி விமலை சந்தித்ததன் மூலமாக இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டது ஆனால் அக்ஷயா வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஏனெனில் நான் என்னுடைய மகளை டாக்டருக்கு படிக்க வைத்துள்ளேன் எங்கள் பொண்ணு உங்களுக்கு தருவது என திட்டி அனுப்பி விட்டார்களாம். அதன்பிறகு அக்ஷயா வீட்டுக்கு தெரியாமல் கும்பகோணத்தில் உள்ள முருகன் கோவிலில் விமலுடன் திருமணம் செய்து கொண்டாராம்.

இன்நிலையில் தற்போது விமலுக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

vimal
vimal
vimal
vimalvimal

Leave a Comment