சன் டிவி மகராசி சீரியலுக்கு என்ட்ரிக் கொடுக்கும் வில்லாதி வில்லி.!

பொதுவாக சீரியல் ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள் மேலும் ஒரு சில நடிகைகள் சின்னத்திரைக்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வில்லாதி வில்லியாக இருந்து வரும் நடிகைகள் ஒரு சிலர் உள்ளார்கள்.

அந்த நடிகை தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியலில் எழுதிக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. மகராசி சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. டாப் சீரியல் களில் ஒன்றாக மகராசி சீரியல் விளங்கி வருகிறது.

இந்த சீரியல் 2019ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் 3ஆண்டு காலங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்ரீ ரஞ்சினி, திவ்யா ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஆர்.ஆரியன், விஜய், ராம்ஜி, ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள்.

இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்த திவ்யா ஸ்ரீதர் சில காரணங்களினால் கடந்த ஆண்டு விலகினார்.அவருக்கு பதிலாக தற்பொழுது ஶ்ரீத்திகா சதீஷ் நடித்து வருகிறார். ஶ்ரீத்திக்கா ஏற்கனவே மெட்டிஒலி, முத்தாரம், கலசம், குலதெய்வம் ஆகிய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகராசி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் சுவாரசியத்தை ஏற்ற வேண்டும் என்பதற்காக பல திருப்பங்களுடன் சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த வகையில் சன் டிவியின் மகராசி சீரியலில் சின்னத்திரையில் பல ஆண்டுகளாக உன்னை நடியாக வளம் வந்து கொண்டிருக்கும் வில்லி கேரக்டரில் வந்தனாவை  மைக்கேல் கேரக்டரில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

vandana
vandana

வந்தனாவை அவ்வளவு எளிதில் யாராலும் அளந்து விட முடியாது என்றால் சன் டிவியில் தொடங்கி ஜீ தமிழ் விஜய் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் வில்லி கேரக்டரில் மட்டுமே நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். நிலையில் மகராசி சீரியல் ஶ்ரீத்திக்காவுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment