அஜித், விஜய் லெவலுக்கு சம்பளத்தை உயர்த்திய வில்லன் நடிகர்.. சோகத்தின் பிடியில் தயாரிப்பாளர்கள்

ajith-vijay-
ajith-vijay-

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களா இருப்பவர்கள் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர் அந்த வகையில் அஜித், விஜய் தற்பொழுது ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர் இவர்கள் தான் இப்படி என்றால் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் கூட தனது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் வில்லனாக நடிக்கும் ஒரு நடிகர் சுமார் 50 லட்சம் சம்பளம் கேட்டு உள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் அல்ல முதலில் குணச்சிதர கதாபாத்திரங்களில் நடித்து பின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்து முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்தவர் விஜய் சேதுபதி.

அதன் பிறகு இவர் பீட்சா, சூது கவ்வும் போன்ற காமெடி கலந்த படங்களில் நடித்து வெற்றிகளை பதிந்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென ஹீரோ, காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என அனைத்திலும் தலைகாட்டினார்.

இதனால் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிக்கின்றன ஆம் வருடத்திற்கு 10 அல்லது 12 படங்களில் நடித்து ஓடினார் இதனால் அவருக்கு காசு வந்ததே தவிர ஒரு சில படங்கள் மரண தோல்வியை சந்தித்தது இதை சுதகிரித்துக் கொண்ட விஜய் சேதுபதி இனி ஹீரோ, வில்லன் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்தார்.

குறிப்பாக வில்லன் கதாபாத்திரகள் தான் அவரை நாடுவதால் வேறு வழி இல்லாமல் அதில் நடிக்கிறார் அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் உயர்த்து உள்ளார் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி  கிட்டத்தட்ட 50 கோடி வரை சம்பளமாக கேட்டு வருகிறாராம்.. போகின்ற போக்கில் அஜித், விஜய்க்கு இணையாக இவரது சம்பளம் இருக்கும் என சொல்லப்படுகிறது.