வில்லன் நடிகர் ஆனந்தராஜ் தற்போது காமெடியனாக நடித்து வெளிவந்த சிறந்த படங்கள்!!

Villain actor Anandaraj is currently a comedian with great films : ஒரு திரைப்படத்தில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதுபோலவே வில்லன்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. ஒரு படத்தில் வில்லன் சரியாக செட் ஆகவில்லை என்றால் அந்த படமே சரியாக ஓடாது. அந்த வகையில் நடிகர் ஆனந்தராஜ் தமிழ் திரையுலகில் ‘ஒருவர் வாழும் ஆலயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் வில்லன் கேரக்டரில் அறிமுகமானார். இவர் மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சிரஞ்சீவி போன்றோருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளிவந்த புலன் விசாரணை,மாநகர காவல், மாமன் மகள், சிம்மராசி, பெரியண்ணா, வானத்தைப்போல, நரசிம்மா, பாட்டாளி, சூரியவம்சம், போன்ற படங்களின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திரசிகர்ககி வெகுவாக கவர்ந்தார்.

இவர் தற்போதெல்லாம் வில்லன் கதாபாத்திரத்தை விட காமெடியன் கதாபாத்திரத்திற்கு செட் ஆகியுள்ளார். இவர் நடித்த

1.நானும் ரவுடி தான், 2.ஜாக்பாட், 3.சிலுக்குவார்பட்டி சிங்கம்,4. மரகத நாணயம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவே இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து நடித்திருப்பார். இது அவர்களின் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதுபோன்று நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை நடிக்கும்போது மேலும் அவரின் சிறப்பான நடிப்பு வெளிப்படுகிறது என்பது ரசிகர்களின் கருத்தாகும்.

Leave a Comment