விஜய் டிவி சீரியல் நடிகை தான் விக்ராந்தின் அம்மாவா.! தனது தங்கையை பற்றி பேட்டியில் கூறிய விஜயின் அம்மா ஷோபனா..

shopana
shopana

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் வசூலை வாரி குவித்த நிலையில் இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் முழு வீச்சுடன் படக்குழுவினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் விஜயின் தம்பியாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் விக்ராந்த். நடிகர் விக்ராந்த்தும் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் தற்பொழுது இவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். மேலும் இவரை தொடர்ந்து விஷ்ணு விஷாலும் இந்த படத்தில் விக்ராந்துடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விக்ராந்தின் அம்மாவும், விஜயின் சித்தியும், ஷோபனாவின் தங்கையும் விஜய் டிவி சீரியல் நடிகை ஆவார்.

lakshmi
lakshmi

விஜயின் அம்மாவான ஷோபனா சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று இருக்கு பேட்டி அளித்த நிலையில் அதில் தன்னுடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் தங்கையை பற்றி கூறிய உள்ளார். அதில் அவர் கூறியதாவது விக்ராந்தின் அம்மா தன்னுடைய சகோதரி அவர் ஒரு சீரியல் நடிகை ஆவார் என கூறினார்.

அது வேறு யாருமில்லை விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் ஆகியோர்களுக்கு அம்மாவாக நடித்தவர் தான். லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர் இறந்து விட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றது தற்பொழுது இவர் இந்த சீரியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.