கரடுமுரடாக ஆளே மாறிய விக்ரம் மகன் துருவ்.! உடலை ஏற்றுவதில் அப்பாவுக்கே டஃப் கொடுப்பார் போல புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

0

dhuruv vikram photo: தமிழ் சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்களின் லிஸ்டில் நடிகர் விக்ரமும் உண்டு. ஏனென்றால் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் படத்திற்காக தனது உடல் எடையை மாற்றி அமைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி நடித்து வருபவர் நடிகர் விக்ரம்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும், தனது உடல் எடையை கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வார். ஆனால் என்னதான் இவர் உடல் நிலையை மாற்றி நடித்து வந்தாலும் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அதனால் நீண்டகாலமாக ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் விக்ரம். இந்த நிலையில் தற்பொழுது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். அடுத்ததாக விக்ரம் 7 கெட்டப்களில் திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். படத்தில் 7 கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளதால் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது..

விக்ரமின் மகன் துருவ் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து விட்டார்.அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் ஆதித்யா வர்மா, திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துரு விக்ரம் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக சியான் 60 என பெயரிடப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தான் தயாரிக்க இருக்கிறார்.

இவர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக விக்ரம் மற்றும் விக்ரமின் மகன் துருவ் வெறித்தனமாக போட்டி போட்டுக்கொண்டு உடல் எடையை ஏற்றி வருகிறார்கள்.

சமீபத்தில்கூட விக்ரமின் மகன் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வந்தது. அதேபோல் அடுத்ததாக விக்ரம் அதைவிட கரடுமுரடாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்டார், இந்த நிலையில் மீண்டும் விக்ரமின் மகன் துருவ் பீமா விக்ரம் போல் உடலை ஏற்றி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

dhruv-vikram-tamil360newz
dhruv-vikram-tamil360newz