ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்க “விக்ரம்” வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா.?

சினிமா உலகில் எப்பொழுதுமே வரலாற்று மற்றும் உண்மை கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது அதை சரியாகப் பிடித்து சில இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர் அவர்களில் ஒருவர் மணிரத்தினம் இவர் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளார்.

படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என திட்டமிடப்பட்டது அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியான நிலையில் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது படத்தில் ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கிஷோர், சரத்குமார், பார்த்திபன், விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி..

மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர் படம் வெளிவர இன்னும் விரல்விட்டு என்னும் நாட்களே இருப்பதால் படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்ய பட குழுவினர் இந்தியாவின் பல முக்கிய இடங்களுக்கு சென்று பிரமோஷன் செய்கின்றனர் மறுபக்கம் படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர், போஸ்டர் போன்றவற்றை வெளியிட்டு அசத்தி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் தான்..  இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதன்படி விக்ரம்  பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்க சுமார் 12 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்களான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment