பக்காவா ஸ்கெட்ச் போட்டு ஓவர் நைட்டில் பேமஸான விக்ரமன்..! சாக்கடை எல்லாம் எங்களுக்கு சால்னா மாதிரி..!

vikraman-1
vikraman-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஒளிபரப்ப வேண்டும் என முடிவு செய்த பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் அதனை ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் தொடங்கி இதுவரை மூன்று வாரங்கள் கடந்த நிலையில் அனைவருடைய சுய இன்பங்களும் மிக வெளிச்சமாக தெரிந்துள்ளது அந்த வகையில் ஒரு சிலர் எந்த ஒரு பிரச்சனையும் தலையிடாமல் பிக் பாஸ் விளையாட்டு விளையாடி வருகிறார்கள்.

அதேபோல மற்ற சில போட்டியாளர்கள் விளையாடுகிறேன் என்று சண்டை போட்டு தங்களை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசனில் மிகவும் வித்தியாசமான ஒரு போட்டியாளர் என்றால் அது விக்ரமன் தான்.

அந்த வகையில் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்தது மட்டும் இல்லாமல் அதன் பிறகு அரசியல் மற்றும் பத்திரிக்கை ஆகியவற்றில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்ட நமது போட்டியாளர் கிடைத்த நேரத்தில் சமூகத்தில் அக்கறையுடன் பல நல்ல விஷயங்களை கூறுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் வீட்டில் பிபி சேனல் டாஸ்க் நடந்து வருகிறது இதில் எல்லாரும் தங்களுக்கு உண்டான திறமையை நிரூபித்து வருகிறார்கள் அந்த வகையில் இதை மிகவும் சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்ரமன் அவர்கள் ஒரே நைட்டில் ட்ரண்ட் ஆகிவிட்டார்.

அதாவது துப்புரவு பணியாளராக விக்ரமன் நடித்துள்ள அந்த காட்சியில் சாக்கடையில் மூழ்கி குப்பை அகற்றும் பொழுது அவர் விஷவாயு தன்மை காரணமாக தாக்கப்படுகிறார் இதனால் விக்ரமன் இறந்து விடுவது போல் காட்சி அமைக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து கமலஹாசன் அவர்கள் போன எபிசோடில் பேசியுள்ளார்.

அந்த வகையில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மிகவும் வேதனையான விஷயம் இதற்காக வெளிநாட்டில் மிஷின் உள்ளது என்று கூறியிருப்பார் அந்த வகையில் விக்ரமன் துப்புரவு தொழிலாளராக நடித்த அந்தக் காட்சி யாரையும் மெய்சிலிர்க்க வைத்தது மட்டும் இல்லாமல் அவர் மீது ஏகப்பட்ட மரியாதையை உருவாக்கி விட்டது.